Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 நவம்பர் 11 , மு.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.மும்தாஜ்)
திருகோணமலையிலிருந்து கடல்த் தொழிலுக்காக மஹவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் சென்ற மோரா படகு கடலில் அனர்த்தத்திற்குள்ளாகியதில் அதில் பயணித்தவர்களுள் மூவர் காப்பாற்றப்பட்டுள்ள நிலையில், ஏனைய இருவர் பற்றிய தகவல்கள் இதுவரையில் தெரியவரவில்லை தெரிவிக்கப்படுகிறது.
இம்மீனவர்கள் சென்ற 'குமாரி 2' எனும் டோரா படகு கடந்த 6ஆம் திகதி இந்தியன் சமுத்திரத்தில் அனர்த்தத்திற்குள்ளாகியுள்ளது. இதன்போது இதிலிருந்த ஐந்து மீனவர்களில் மூவர் வேறு படகில் சென்ற மீனவர்களால் காப்பாற்றப்பட்டுள்ள அதேவேளை, ஏனைய இருவரையும் காப்பற்ற முடியக்துபோயுள்ளதாகவும் அவர்கள் பற்றிய தகவல்கள் தெரியவில்லையெனவும் குறிப்பிடப்படுகிறது.
டப்ளிவ். சுனில் லோவ் (வயது 48) மற்றும் டப்ளிவ் பர்சி ரொட்ரிகோ (வயது 48) ஆகியோரே காணாமல்போன மீனவர்கள் ஆவார்.
சிலாபம் மஹவெவ ஒருதெல்பொத எனும் இடத்தைச் சேர்ந்த கிரிஸ்டி பெர்ணான்டோ (45 வயது), நிஷாந்த (வயது 21), மற்றும் ஜிஹான் (வயது 23) ஆகியோரே இவ்வாறு காப்பாற்றப்பட்ட மீனவர்கள் ஆவார்.
கடந்த ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்திலிருந்து கடல் தொழிலுக்காக கடலுக்குள் பயணத்தை ஆரம்பித்ததாகச் சொல்லப்படும் இந்த டோரா படகு திருகோணமலைக்கு 180 கிலோ மீற்றர் தொலைவில் இந்தியன் சமுத்திரத்தில் கடந்த 6ஆம் திகதி இவ்வாறு அனர்த்தத்திற்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
8 minute ago
12 minute ago
16 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
12 minute ago
16 minute ago
1 hours ago