2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

ஆசிரியர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கு

Super User   / 2010 டிசெம்பர் 08 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவும் கிண்ணியா கல்வி வலயமும் இணைந்து கிண்ணியா வலயத்திற்கு உட்பட்ட ஆசிரியர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்று இன்று காலை கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றது.

கிண்ணியா மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எச்.எம்.சமீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்களுக்கு டெங்கு நுளம்பு பெருகுமிடம், அதனால் ஏற்படும் விளைவுகள், கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை போன்றன தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில் திகோணமலை மாவட்ட தொற்று நோய்ப்பிரிவு பிராந்திய வைத்திய அதிகாரி திருமதி கயல்விழி, கிண்ணியா கல்வி வலய உடற்கல்வி உதவி கல்வி பணிப்பாளர் ஆர்.நசீம் மற்றும் சுகாதார கல்வி அதிகாரிகள், பொதுச்சுகாதார அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--