2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

சுமேதகம முன்பள்ளி திறப்பு விழா

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 14 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எகெட் கரித்தாஸ் நிறுவனத்தினால் கட்டிமுடிக்கப்பட்ட சுமேதகம முன்பள்ளி பாலர் பாடசாலையின் திறப்பு விழா நடைபெற்றது.

திருகோணமலை மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர்  வணக்கத்திற்குரிய ஜோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை சுமேதகம முன்பள்ளி பாலர் பாடசாலையை திறந்துவைத்தார்.

இந்நிகழ்வில் எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அருட்பணி பிரான்சிஸ் சேவியர் டயஸ், நிகழ்ச்சித் திட்ட உத்தியோகத்தர் திரு.ஐப்.ஏ.பிரான்சிஸ், திட்ட உத்தியோகத்தர் திரு.பே.மரியநாயகம்;, கிராம உத்தியோகத்தர் திரு.காமினி அப்பிரதேசத்தின் பௌத்தமத குரு ஐயசுமனா ராம விஹாராதிபதி சாஸ்திரபதி பாஷாவேதி கபுகொல்லேவே மஹநாயக்க ஆனந்த கிச்சி வஹன்சே, நிறுவனத்தின் ஊழியர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள்  மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். இதன்போது, சிறார்களின் பல்வேறு கலை  நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .