2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

மூதூரில் வெள்ள நீர் வழிந்தோட நடவடிக்கை

Super User   / 2011 ஜனவரி 12 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(முறாசில்)

மூதூர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் அனைத்து கிராமங்களும் மூழ்கிவிடும் என்ற அபாயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து வெள்ள நீர் வடிந்து செல்லுவதற்காக  மூதூரை ஊடறுத்துச் செல்லும் கொல்லன் ஆற்றை கடலோடு இணைத்துவிடும் வகையில் இன்று மாலை பாரிய வாய்க்கால் தோண்டும் நடவடிக்கை இடம்பெற்றது.

இந்நடவடிக்கை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அபூ உபைதா றாசிக் பரீத்தின் வழிகாட்டலில் மூதூர் பிரதேச செயலாளர், மூதூர் பொலிஸார் ஆகியோரின் ஒத்துழைப்பில் இடம்பெற்றது.

இதேவேளை மூதூரிலிருந்து திருகோணமலைக்கான இரு வழி போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X