Super User / 2011 ஜனவரி 16 , மு.ப. 08:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
மக்கள் வங்கி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மாவட்ட மக்களுக்கு உதவுவதற்காக 20 இலட்சம் ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்களை இன்று ஞாயிற்றுக்கிழமை வழங்கியுள்ளது.
இப்பொருட்களை திருகோணமலை மாவட்ட செயலகத்தில் வைத்து மேலதிக அரசாங்க அதிபர் ஆ.நடராசாவிடம் மக்கள் வங்கியின் திருகோணமலை பிராந்திய முகாமையாளர் கே.டி.கே.பெரேரா வழங்கினார்.
திருகோணமலை பிரதான கிளை முகாமையாளர் கே.செல்வராசா, உதவி முகாமையாளர் கே.அமீர்தீன் உட்பட மக்கள் வங்கி ஊழியர்களும் இதில் கலந்து கொண்டனர்.
சுனாமி அனர்த்தத்தின் போது மக்கள் வங்கி திருகோணமலை மாவட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
5 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago
7 hours ago