Menaka Mookandi / 2011 ஜனவரி 17 , மு.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
(முறாசில்)
வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட ஆசிரியர் மற்றும் அரசாங்க ஊழியர்களுக்கு 3 மாதத்திற்குரிய சம்பள முற்பணத்தை அல்லது 3 மாதத்திற்குரிய சம்பளத்தை வட்டியில்லாக் கடனாக வழங்குவதுடன், அரசாங்க நிவாரணங்களையும் பெற்றுக் கொடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் தேசிய பொதுச்செயலாளர் எம். அனஸ் கையெழுத்திட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ள அவசர மகஜரிலே இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் ஏனைய சில பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கின் காரணமாக அதிகமான அரசாங்க ஊழியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இருந்த போதும் அரசாங்க ஊழியர் என்ற காரணத்தினால் அவர்களுக்கு ஏனைய பொதுமக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள் மறுக்கப்பட்டு வருகின்றன. எனவே, எல்லோரையும் போல இழப்புக்களை சந்தித்துள்ள அரசாங்க ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.
அத்துடன், அரசாங்க ஊழியர்கள் இயல்பு நிலைக்கு திரும்பும் வகையில் 3 மாதத்திற்குரிய சம்பள முற்பணத்தை அல்லது வட்டியில்லாக் கடனை வழங்குமாறு கோருகிறோம் என அம்மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
6 minute ago
37 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
37 minute ago
2 hours ago