2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

புதையல் தோண்டிய இருவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 21 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அப்துல்சலாம் யாசிம்)
 
புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் தலைமறைவாகிய நிலையில் கைதான இருவரையும் எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

திருகோணமலை, மொறவெவ  பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் தலைமறைவாகிய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மொறவெவ பொலிஸ் பொறுப்பதிகாரி தம்மிக விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
 
மதுரட பகுதியைச் சேர்ந்தவர்களான டபிள்யூ.ஜே.எம்.புபுது சந்தன, ஆர்.ஏ.தர்மசிறி உபாலி ஆகிய இருவருமே 06 மாதங்களாக தலைமறைவாகியிருந்தனர்.
 
அண்மையில் மொறவெவ  பௌத்த விகாரைக்கு அருகாமையில் புதையல் தோண்டிக்கொண்டிருந்த ஆறு பேரையும் பொலிஸார் சுற்றிவளைத்தபோது, இவர்களில் இருவர் தப்பியோடினர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து ஒருவர் கோமரங்கடவல பகுதியிலும் மற்றையவர் ஹிங்குராங்கொட பகுதியிலும் கைதுசெய்யப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .