2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

திருகோணமலையில் சாரணர் ஸ்தாபகர் தின நிகழ்வு

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 23 , மு.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

சாரணர் ஸ்தாபகர் தின நிகழ்வு திருகோணமலையிலும் அனுஷ்டிக்கப்பட்டது. இராம கிருஷண சங்கம் ஸ்ரீகோணேஸ்வரா இந்துக் கல்லூரி இரண்டாவது திருமலை சாரணர் குழு நேற்று மாலை 4.00 மணிக்கு  இதனை உள்ளக மைதானத்தில் அனுஷ்டித்தனர்.

ஸ்தாபகர் பேடன் பவுல் பிரவுவின் திருவுருவப்படத்திற்கு மலர் வணக்கம்  இதன்போது செலுத்தப்ட்டது. இதனைத் தொடர்ந்து புதிதாக குழுவில் இணைந்துகொண்ட சாரணர்களுக்கும் . குருளைச் சாரணர்களுக்கும் அங்கத்துவ சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டன. தமது வயதினை நிறைவு செய்த 9 குருளைச் சாரணர்கள் சாரண குழுவில் இணைக்கப்பட்டனர்.

கல்லூரி அதிபர் இ.புவனேந்தரன்இ ஆரம்ப பிரிவு உதவி அதிபர் ந.சங்கரதாஸ். மாவட்ட சாரணர் ஆணையாளர் செ.பத்மசீலன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். சாரணர்கள்இ குருளைச் சாரணர்கள்களின் பெற்றோர்களும் இதில் பங்கு கொண்டனர்.

பெற்றோர் அன்சாரி அமரர் சித்தி அமரசிங்கத்தின் நினைவாக அவரால் வெளிடப்பட்ட  சாரணர் புதிய செயல்திட்டம் என்னும் நூலின் பிரதிகளின் ஒரு தொகுதியை வழங்கி வைத்தார்.

முதலாவது திருமலை சாரணர் குழு புனித சூசையப்பர் கல்லூரி சாரணர்கள் மூன்றாது மைல் கல்லிலிருந்து சூசையப்பர் வயோதிபர் நிலையம் வரை விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்றையும் மேற்கொண்டனர். வயோதிபர் இல்லத்தில் தங்கியிருந்தவர்களுக்கு   உணவுப் பொட்டலங்களையும் அவசர தேவைப் பொருட்களையும் வழங்கி வைத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--