2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

அமைச்சர் ராஜித திருகோணமலை விஜயம்

A.P.Mathan   / 2011 ஜூன் 11 , பி.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எஸ்.குமார்)

மீன்பிடி நீரியல் வளத்துறை அமைச்சர் வைத்தியர் ராஜித சேனாரத்ன திருகோணமலைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை இன்று சனிக்கிழமை காலை மேற்கொண்டார். இவ்விஜயத்தின்போது திருகோணமலை காட்டை வீதியில் 75 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டு வரும் மீன் மொத்த வியாபார கட்டட வேலைகளை பார்வையிட்டதோடு, மீன்படித்திணைக்களத்தின் இபாட் திட்டத்தின் கீழ் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களையும் திறந்து வைத்தார். இந் நிகழ்வில் பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே, கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் ஆரியவதி கலபதி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அத்தோடு திருகோணமலை பட்டணமும் கூழலும் பிரதேச செயலக பிரிவில் மிகுந்தபுரம் என்னும் இடத்தில் அமைக்கப்ட்ட 33 வீடுகளையும் ஆண்டான்குளம் பகுதியில் அமைக்கப்படட 25 வீடுகளையும் அவர் கையளித்தார்.

ஆண்டான்குளம் பகுதியில் உள்ள மீனவர்களுக்கு ஆழ்கடலுக்கு சென்று மீன்கனை பதப்படுத்தி வைப்பதற்கான குளிரூட்டி பெட்டிகளையும் வழங்கி வைத்தார். 140,000 பெறுமதியான பெட்டிகள் 6 பேருக்கும் 45,000 பெறுமதியான பெட்டிகள் 7 பேருக்கும், 40,000 பெறுமதியான பெட்டிகள் 12 பேருக்கும் அமைச்சர் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .