Menaka Mookandi / 2011 ஜூன் 21 , மு.ப. 06:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அமதோரு அமரஜீவ,எஸ்.எஸ்.குமார்)
சர்ச்சைக்குரிய கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றம் தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து நாளை மறுதினம் வியாழக்கிழமை நடத்துவதற்கு ஏற்பாடாகியிருந்த கிழக்கு மாகாண ஆசிரியர்களின் சுகயீனப் போராட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவுக்கமைய இந்த இடமாற்றங்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த போராட்டத்தை ரத்து செய்ய அனைத்து ஆசிரியர் சங்கங்களும் இணைந்து தீர்மானித்ததாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், 'தேசிய ஆசிரியர் இடமாற்றக் கொள்கையை பூரணமாக அலட்சியம் செய்யும் வகையிலும் வருடத்தின் நடுப்பகுதியில் இந்த இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் பாடசாலைகளின் இயல்பான தொழிற்பாடுகளும் மாணவர்களின் கல்வியும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளமையையும் சுட்டிக்காட்டி குறித்த இடமாற்றங்களை நிறுத்துவது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த நிலையிலேயே மேற்படி போராட்டத்தை நடத்த ஆசிரியர் சங்கங்கள் இணைந்து தீர்மானித்தன. இருப்பினும் ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய இந்த இடமாற்றம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதனால் எமது தீர்மானத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தினோம்.
இருப்பினும், இனிவரும் காலங்களிலும் ஆசிரியர் இடமாற்றக் கொள்கையை மீறி நடவடிக்கைகள் எடுக்கப்படும் பட்சத்தில் அனைத்து ஆசிரியர் சங்கங்களும் இணைந்து போராட்டங்களை நடத்தும்' என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
23 minute ago
29 minute ago
47 minute ago
vaasahan Tuesday, 21 June 2011 08:29 PM
எல்லோரும் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும். சம்மாந்துறையில் தொடங்கப்படும் எந்தப்போராட்டமும் தோற்றது கிடையாது. இந்தியப்படயினருக்கு எதிரான போராட்டாம் முதலாக நான் அவதானிக்கின்றேன். அந்த மக்கள் போரடுவதேயில்லை. தொடங்கினால் அது வெற்றியிலேயே முடியும். அவர்கள் பிரதேச வாதம் பேசியதேயில்லை. பேசினால் இந்தமுறை நௌஷாத் எம்பியாகாமல் விட வழியேயில்லை.வீண் தப்புக்கணக்குப் போடவேண்டாம். மு.கா முதலில் காலூன்றியது சம்மந்துர யில்தான்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
29 minute ago
47 minute ago