2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

தோப்பூரில் நடமாடும் சேவை

Menaka Mookandi   / 2011 ஜூன் 23 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எப்.முபாரக்)

தோப்பூர் பிரதேச மக்கள் எதிர்நோக்கும் அத்தியவசிய பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கும் முகமாக தோப்பூர் பொலிஸ் நிலையத்தினால் நாளை மறுதினம் நடமாடும் சேவை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தோப்பூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மஹிந்த சேனாரத்தின தெரிவித்தார்.

தோப்பூர் அல் ஹம்ரா மகாவித்தியாலயத்தில் நடைபெறவுள்ள இந்த நடமாடும் சேவையின் மூலம் கடந்த கால யுத்த சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்ட இப்பிரதேச மக்கள் பிறப்பு, இறப்பு அத்தாட்சிப்பத்திரம், கடவுச்சீட்டு, தேசிய அடையாள அட்டை, திருமணச் சான்றிதழ்கள் ஆகியவற்றைப் பெறுவதில் எதிர்நோக்கி வந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதோடு பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற்றுக்கொடுக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .