2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

எகெட் கரித்தாஸ் நிறுவனத்தால் நல்லூரில் வீடுகள் கையளிப்பு

Menaka Mookandi   / 2011 ஜூலை 18 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திருகோணமலை மாவட்ட எகெட் கரித்தாஸ் நிறுவனமானது பெல்ஜியம் கரித்தாஸ் அமைப்பின் அனுசரணையுடன் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நிரந்தர வீடுகளை அண்மையில் பயனாளிகளுக்கு கையளித்தது.

இந்நிகழ்வில் இலங்கை எடெக் கரித்தாஸ் தேசிய பணிப்பாளர் அருட்பணி ஜோர்ஜ் சிகாமணி, திருகோணமலை மாவட்ட எகெட் கரித்தாஸ் பணிப்பாளர் அருட்பணி. பிரான்சிஸ் சேவியர் டயஸ் மற்றும் நிறுவனத்தின் அதிகாரிகள் மேற்படி வீடுகளை பயனாளிகளுக்கு கையளித்தனர்.

மூதூர் பிரதெச செயலாளர் என்.செல்வநாயகம், நல்லூர் கிராம உத்தியோகத்தர் எஸ்.யோகராஜா மற்றும் நல்லூர் கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் ஆகியோரும் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--