2021 மே 10, திங்கட்கிழமை

திருமலையில் டெங்கு ஒழிப்பு பேரணி

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 16 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சி.குருநாதன்)

இலங்கை வங்கியின் 72ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியொன்று, திருகோணமலை பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. திருகோணமலை நகரில் அநுராதபுரம் சந்தியிலிருந்து காந்தி நகர் சிறுவர் பூங்கா வரை டெங்கு இந்த பேரணி இடம்பெற்றது.

இலங்கை வங்கியின் கிழக்கு பிராந்திய முகாமையாளர் சமிந்த வெலகெதர, திருகோணமலை நகரசபைத் தலைவர் கே.செல்வராசா, திருகோணமலை பொது வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் இ.ஜி.ஞானகுணாளன், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் திருமதி பி.கே.ஞானகுணாளன் மற்றும் பொலிஸ், இராணுவ அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள் பேரணியில் பங்குபற்றினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X