Kogilavani / 2011 ஒக்டோபர் 01 , மு.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சி.குருநாதன்)
'பன்மைத்துவ கலாசாரம் ஊடாக சமாதானம்' எனும் தலைப்பில் கிழக்குமாகாணப் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற சித்திரம், கவிதை போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசு வழங்கும் வைபவம் நேற்று வெள்ளிக்கிழமை திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் கலையரங்கில் இடம்பெற்றது.
ஜேர்மன் சர்வதேச ஒத்துழைப்பு அமைப்பின் (GIZ-ESC) சமூக இசைவுக்கான கல்விச் செயற்றிட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் தமிழ், சிங்கள மொழி மாணவர்களுக்கிடையே இப்போட்டியை நடத்தியிருந்தது.
அமைப்பின் சிரேஷ்ட நிபுணத்துவ ஆலோசகர் சி.தண்டாயுதபாணியின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சிறப்பு அதிதியாக வலயக் கல்விப் பணிப்பாளர் கி.முருகுப்பிள்ளை பங்குபற்றினார்.
இதன்போது, உவர்மலை விவேகானந்த கல்லூரி மாணவிகளின் இசை மற்றும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
7 hours ago
7 hours ago
14 Nov 2025
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
14 Nov 2025
14 Nov 2025