2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

கிண்ணியாவில் மாபெரும் சந்தை

Kogilavani   / 2011 ஒக்டோபர் 19 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

கிண்ணியா பிரதேச செயலக சமூர்த்தி பிரிவினரால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள மாபெரும் சந்தை இன்று புதன்கிழமை கிண்ணியா நகர சபை மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

 

இச்சந்தையில் கிண்ணியா, தம்பலகாமம், கந்தளாய் ஆகிய பிரதேச செயலக பிரிவுகளைச் சேர்ந்த சமூர்த்தி பயனாளிகள் கலந்துகொண்டனர்.
இச்சந்தையில் உற்பத்தி பொருட்கள் பல விற்பனை செய்யப்படுகின்றன.

இன்றைய முதல்நாள் நிகழ்வில், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்,எம்.எஸ்.தௌபீக், கிழக்கு மாகாண சபை தவிசாளர், எச்.எம்.எம்.பாயிஸ், கிழக்கு மாகாண சபை உறுப்பினரும்,சபை முதல்வருமான எஸ்.எல்.எம்.ஹஸன், மௌலவி, மாகாண சபை உறுப்பினர் எம்.ஏ.எம்.மஹ்ரூப், கிண்ணியா பிரதேச பதில் செயலாளர் சி.கிருஷ்னேந்திரன், திட்டமிடல் பணிப்பாளர் ஏ.ஸீ.எம்.முஸ்இல் உட்பட மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X