2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

திருமலையில் உளசமூக பயிற்சிப் பட்டறை

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 21 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

திருகோணமலை மாவட்டத்தில் உளநலத்தை மேம்படுத்தி மக்களை வலுவூட்டும் நோக்கத்துடன் திருகோணமலை எகெட் கரித்தாஸ் சுகாதார உளசமூக பிரிவினரால் நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் உளசமூக பயிற்சி பட்டறை ஒன்று தொடக்கம் நடத்தப்பட்டு வருகின்றது. 

 

இப்பயிற்சி பட்டறைக்கு திருகோணமலை பட்டணமும் சூழலும், கிண்ணியா, குச்சவெளி, கோமரங்கடவல, மூதூர் பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த 25 தொண்டர்கள் பங்கு பற்றுகின்றனர். இப்பயிற்சி பட்டறையில் நிறுவனத்தின் பணிப்பாளர் அருட்பணி பிரான்சிஸ் சேவியர் டயஸ் நிகழ்ச்சி திட்ட முகாமையாளர் ஜி.ஏ.பிரான்சிஸ், திட்ட உத்தியோகஸ்தர் பே.மரியநாயகம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

பிரிவின் இணைப்பாளரான கு.பிரகலாதனின் வரவேற்புரையைத் தொடர்ந்து உரையாற்றிய நிறுவனத்தின் பணிப்பாளர்; திருகோணமலை எகெட் கரித்தாஸ் 2002ஆம் ஆண்டில் அதாவது சுனாமியின் முன்னரே உளநல பணிகளை ஆரம்பித்து, சுனாமியிலும் பின் தொடர்ந்தும் உளநல பணிகளை செய்து வருவதாக கூறினார்.

வாளர்களாக செயலாற்றிய ளுநுனுநுஊ தேசிய நிலையத்தின் உளசமூக இணைப்பாளர் அருட்சகோதரி பற்றிமாநாயகி, திருகோணமலை வைத்தியசாலையின் மனநல பிரிவைச் சேர்ந்த மனோதத்துவ நிபுணர் - வைத்தியர் பிரபாத் அவர்களுடன் யாழ்ப்பாணம் கியூடெக், மன்னார் வாழ்ண்;வாதயம், மட்டக்களப்பு எகெட் ஆகிய மறைமாவட்டங்களைச் சேர்ந்த திரு. ஜோசப் பாலா, திரு.சஞ்சீவன், செல்வி சுமதி, செல்வி. சுபோதினி ஆகியோர் உளநல மேம்பாடு, பாதிக்கப்பட்ட  பிள்ளைகள், குடும்பம், சிகிச்சை முறை பற்றியும் ஏனைய உளநல விடயங்கள் பற்றியும்  தெளிவான விளக்கங்களை அளித்தார்கள். இப்பட்டறை நாளை சனிக்கிழமை மதியம் 12.30 மணியுடன் நிறைவடையும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--