2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

வறிய பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஊக்குவிப்பு தொகை வழங்கல்

Kogilavani   / 2011 நவம்பர் 15 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சி.குருநாதன், எம்.பரீட்)

லண்டன் அகிலன் பவுண்டேசன் அமைப்பின் பல்கலைக்கழக மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ்  32 பல்கலைக்கழக மாணவர்களுக்கான ஊக்குவிப்பு உதவிகள் வழங்கும் நிகழ்வு மூதூர் கிழக்கு-சேனையூரில் அமைந்துள்ள சம்பூர் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இதன்போது, லண்டன் அகிலன் பவுண்டேசன் அமைப்பினால் ஒவ்வொரு மாணவருக்கும் தலா ஐயாயிரம் ரூபா வீதம் வழங்கப்பட்டது.

திருகோணமலை மாவட்ட இளைஞர் அபிவிருத்தி அமைப்பான அகத்தின் ஏற்பாட்டில், அகத்தின் மாவட்ட இணைப்பாளர் பொ.சற்சிவானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், லண்டன் அகிலன் பவுண்டேசன் ஸ்தாபகர் கோபாலகிருஸ்ணன், மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் அ.விஜயானந்தமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கான ஊக்குவிப்புத் தொகையை வழங்கினர்.

கடந்த ஆண்டும் லண்டன் அகிலன் பவுண்டேசன் அமைப்பு 32 வறிய பல்ககைக்கழ மாணவர்களுக்கு இது போன்ற ஊக்குவிப்பு தொகையை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X