2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

திருகோணமலை மாவட்டத்திற்கு பிரான்ஸ் தூதுவர் விஜயம்

Super User   / 2011 டிசெம்பர் 01 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரான்ஸ் அபிவிருத்தி முகவர் நிலையத்தினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களை பார்வையிடுவதற்காக இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிரிஸ்டினா ரொபிகேன் அண்மையில் கிழக்கு மாகாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டார்.

கடந்த 2005ஆம் ஆண்டு முதல் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தில் புனர்நிர்மாணம் மற்றும் அபிவிருத்திகளை மேற்கொள்வதற்காக பிரான்ஸ் அரசாங்கம் சுமார் 12 பில்லியன் ரூபா நிதி வழங்கியுள்ளது.

இந்த திட்டத்தின் ஊடாக  வீதிகள், பாலங்கள், நீர் வழங்கல், மின்சாரம உள்ளடங்களாக சுனாமியால் பாதிக்கப்பட்ட உட்கட்டமைப்பு திட்டங்களை புனர்நிர்மாணம் செய்தலும் புனரமைத்தலும் இடம்பெற்றுகின்றது.

தற்போது, 3.5 பில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இலங்கையில் மிக உயர்ந்த நீர் தாங்கியை தூதுவர் கிரிஸ்டினா பார்வையிட்டார்.   

இந்நீர் தாங்கியின் மூலம் கந்தளாய், கிண்ணியா, தம்பலகாமம், மற்றும் திருகோணமலை போன்ற பிரதேசங்களை சேர்ந்த சுமாh 300,000 மக்கள் நன்மையடையவுள்ளனர்.

இதேவேளை, திருகோணமலை மாவட்டத்திலுள்ள பாலர் பாடசாலைகள், பால் சேகரிக்கும் நிலையம்  மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலை உள்ளிட்ட பல இடங்களுக்கும் இவர் விஜயம் மேற்கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X