2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

கிண்ணியாவில் நடமாடும் சேவை

Kogilavani   / 2012 நவம்பர் 17 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கியாஸ் ஷாபி, எம்.பரீத்)

தேசத்துக்கு மகுடம் கண்காட்சியியை முன்னிட்டு கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மக்களுக்கு நடமாடும் சேவை ஒன்று இன்று சனிக்கிழமை கிண்ணியா மத்திய கல்லூரியில் இடம்பெற்றது.

கிண்ணியா பிரதேச செயலாளர் சி.கிரிஸ்நேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நடமாடும் சேவையை கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் ஆரம்பித்து வைத்தார்.

வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த நடமாடும் சேவையில் 13 திணைக்களங்களைச் சார்ந்த சேவைகள் இடம்பெற்றன.

இதன்போது தற்செயல் நிவாரணத்துக்கான காசோலை, சுயதொழில் வாய்ப்புக்கான காசோலை, பாடசாலை வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணப் பொதிகள் மற்றும் காணி அளிப்புப் பத்திரம் போன்றவை வழங்கிவைக்கப்பட்டன.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .