2021 ஜனவரி 22, வெள்ளிக்கிழமை

நிர்வாகத் திறன்களை மதிப்பீடு செய்வதற்கான போட்டியில் குச்சவெளி பிரதேச செயலகம் வெற்றி

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 20 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கஜன்)

தேசிய  உற்பத்தித்திறன் அமைச்சு, பிரதேச செயலகங்களின் நிர்வாகத்  திறன்களை மதிப்பீடு செய்வதற்காக நடத்திய போட்டியில் திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச  செயலகம் தேசிய  ரீதியில் 58ஆவது இடத்தையும் கிழக்கு  மாகாண  ரீதியில் முதலாம் இடத்தையும் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது.

தேசிய  உற்பத்தித்திறன் அமைச்சு, பிரதேச செயலகங்களின் நிர்வாகத்  திறன்களை மதிப்பீடு செய்வதற்கான  போட்டிகளை இந்த வருடம்  நாடெங்கிலும் நடத்தியது.

பிரதேச  செயலாளர் அ.உமாமகேஸ்வரன், நிர்வாக உத்தியோகஸ்த்தர் கா.கணேஸ்வரன் ஆகியோரின் அயராத முயற்சியும் பிரதேச  செயலக ஊழியர்கள், கிராம சேவையாளர்கள்,  சமுர்த்தி அதிகாரசபை உத்தியோகஸ்த்தர்கள், வெளிக்கள உத்தியோகஸ்த்தர்களின் அயராத ஒத்துழைப்பும் கூட்டிணைவும் இந்த வெற்றிக்கு காரணமாக அமைந்தது என தெரிவிக்கப்படுகின்றது.

  Comments - 0

  • thilu Tuesday, 20 November 2012 05:33 PM

    கலக்கிட்டாங்கப்பா!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .