2021 ஜனவரி 23, சனிக்கிழமை

ஜனாதிபதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு தென்னங் கன்றுகள் வழங்கல்

Super User   / 2012 நவம்பர் 20 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


(முறாசில்)


தென்னைப் பயிர் செய்கை சபையினால் தென்னங் கன்றுகள் வழங்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை மூதூரில் இடம்பெற்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 67ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு ஷாபி நகர் தெங்கு அபிவிருத்தி சங்கத் தலைவர் ஏ.ஜி.கப்பார் தலைமையில் ஷாபி நகர் ஜும்ஆப்பள்ளிவாசல் முன்றலில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், மூதூர் பிரதேச சபை தவிசாளர் ஏ.எம். ஹரீஸ், உதவித் தவிசாளர் ஹாஜா முகைதீன், மூதூர் பிரதேச செயலாளர் என்.பிரதீபன், தென்னை பயிர்ச் செய்கை சபையின் பிராந்திய முகாமையாளர் சுனந்த கமகே, தென்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.பாhத்தீபன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன் போது ஷாபி நகர்  தெங்கு அபிவிருத்தி சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு சுமார் 3 ஆயிரம் தென்னங்கன்றுகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. மூதூர்  பிரதேசத்தில் மொத்தம் 32,000 தென்னங் கன்றுகள் வழங்குவதற்கு தென்னைப் பயிர்ச் செய்கை சபையினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .