2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

மூதூர் சிவில் பாதுகாப்புக் குழுக்களின் மீளாய்வு கூட்டம்

Super User   / 2012 நவம்பர் 21 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


(முறாசில்)


சிவில் பாதுகாப்புக் குழுக்களின் முன்னேற்ற மீளாய்வு சம்பந்தமான ஒன்று கூடலொன்று இன்று புதன்கிழமை மூதூரில் இடம்பெற்றது.

உதவி பொலிஸ் அத்தியட்சகர் சீ.ஏ பிரேமசாந்த தலைமையில் மூதூர் பொலிஸ் நிலைய  பொறுப்பதிகாரி எம்.நௌபரின் ஒத்துழைப்புடன் மூதூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இந்த ஒன்றுகூடல் இடம்பெற்றது.

கிழக்கு மாகண பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி விஜேகுணவர்த்தன, பொலிஸ் அத்தியட்சகர் பந்துல விஜேவர்த்தன, சம்பூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.ஐ.ஜயவர்த்தன, மூதூர் பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.ஹரீஸ், திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.எம்.தௌபீக், மூதூர் பிரதேச செயலாளர் என்.பிரதீபன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மூதூர் பிரதேச செயலகப் பரிவிலுள்ள 32 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் செயற்படும் சிவில் பாதுகாப்பு குழுக்களது செயற்பாடு பற்றி ஆராயப்பட்டதோடு  சிறிய மற்றும் பெரிய குற்றங்களைத் தடுப்பதில் பாதுகாப்புக் குழுக்களது மேலான  பங்கு குறித்தும் எடுத்துக் கூறப்பட்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .