2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

வெள்ளத்தினால் சிறிதளவில் பாதிப்புக்குள்ளான வீடுகளுக்கு நட்ட ஈடு

Kogilavani   / 2012 டிசெம்பர் 31 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சி.குருநாதன்)
மழை, மற்றும் வெள்ளம் காரணமாக கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் சிறிய அளவில் சேதமடைந்த வீடுகளுக்கு தலா 20,000 ரூபா வீதம் நட்டஈடு வழங்குவது என்று கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டடுள்ளதாக மாகாண அமைச்சரவை பேச்சாளரான மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெவ்வை தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகள் தொடர்பாக வெளியிட்ட ஊடக அறிக்கையலே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை வெள்ளபெருக்கினால் சேதமடைந்துள்ள மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களம், உள்ளூராட்சி திணைக்களம் ஆகியவற்றுக்கு சொந்தமான வீதிகள், மாகாண நீர்ப்பாசனத் திட்டங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள் விவசாய திட்டங்கள் ஆகியவற்றுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்து மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கப்படுவதாகவும் அதன்பின்னர் மாகாண சபையின் விசேட நிதி ஒதுக்கீட்டு மூலம் அவற்றை புனர்நிர்மாணம் செய்யும் வேலை 2013 ஜனவரி முதல் ஆரம்பிக்கப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கான அங்கீகாரத்தை கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவை வழங்கியிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .