2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

பணம்பறிக்க முற்பட்ட இளைஞர்கள் மூவர் கைது

A.P.Mathan   / 2013 ஜூலை 20 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத், ஒலுமுதீன் கியாஸ்
 
கிண்ணியாவில் ஜமாஆதே இஸ்லாமி நிறுவனமொன்றின் தலைவரொருவரை தொலைபேசி மூலம் மிரட்டி பணம் பறிக்க முயற்சி மேற்கொண்ட மூன்று இளைஞர்களை கிண்ணியா பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை மாலை கைது செய்துள்ளனர்.
 
கிண்ணியாவில் ஜமாஆதே திருகோணமலை பிராந்திய தலைவராக கடமையாற்றும் ஐயூப் முகம் நிஜாம் ஆசிரியரை மிரட்டி 10 இலட்சம் ரூபா பணத்தை கொண்டு வருமாறு இவ் விளைஞர்கள் தொலை பேசி மூலம் மிரட்டி வந்துள்ளனர்.
 
இச்சம்பவம் தொடர்பாக கிண்ணியா பொலிஸிற்கு முறைப்பாடு செய்துவிட்டு பொலிஸாரின் அனுமதியோடு நேற்று மாலை கிண்ணியா சூரங்கல் பகுதியில் குறிப்பிட்ட இடத்தில் பணத்தை வைத்து விட்டு வந்து விட்டார்.
 
இதனை பெற்றுக்கொள்வதற்காக மூன்று இளைஞர் அவ்விடத்திற்கு வருகை தரும் போது கிண்ணியா பொலிஸாரினால் இவர்கள் கைதுசெய்யப்பட்டு விசாணையை மேற் கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X