2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

கிராமங்கள் தோறும் சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வும் ஆலோசனையும்

Super User   / 2013 ஜூலை 30 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சு மற்றும் இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு ஆகியன  இணைந்து கிராமங்கள் தோறும் சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வையும் சட்ட ஆலோசனை உதவி முகாம்களையும் நடத்தி வருகின்றன.

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் அனுசரனையுடன் மூதூர் சட்ட உதவிக்கான நிலையம் இந்த சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டத்தையும் சட்ட உதவி முகாம்களையும் வழங்கி வருகின்றது.

ஜுலை மாதத்தின் சமூக ஒருமைப்பாட்டு வாரத்திற்கு சமாந்தரமாக சட்ட ஆலோசனை மற்றும் சட்ட உதவியை வழங்குவதற்கான நடமாடும் சேவை வெருகல் மற்றும் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுகளில் கடந்த ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய தினங்களிள் இடம்பெற்றது.

பாட்டாளிபுரம், நல்லுரர், தாகிப் நகர், வெருகல், சூரநகர் ஆகிய கிராம சேவகர் பிரிவுகளிலுள்ளோர் இந்த சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வையும் சட்ட ஆலோசனை உதவி முகாம்களில்  பங்குபற்றிப் பயனடைந்து வருவதாக சட்ட உதவி நிலைய சட்டத்தரணி  ஏ.ருக்ஷானா பானு தெரிவித்தார்.

இந்த சட்ட உதவி விழிப்புணர்வு வேலைத் திட்டத்திலும் சட்ட ஆலோசனை உதவி முகாம்களிலும் தேசிய ஒருங்கிணைப்பு மேம்பாட்டு உத்தியோகத்தர் பீ றிவாஸ், மூதூர் சட்ட உதவி நிலைய சட்டத்தரணி ஏ.ருக்ஷானா பானு, திருகோணமலை சட்ட உதவி நிலைய இணைப்பாளர் இரா.திருக்குமரநாதன் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X