2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

இரண்டு இலட்சம் பெறுமதியான வாழ்வாதார உதவிகள்

Kogilavani   / 2014 மார்ச் 26 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எ.எம்.ஏ.பரீத்


திருகோணமலை மாவட்ட இள மங்கையர் கிறிஸ்தவ கழகம் சார்பில் வளர்மதி கிராம பெண்கள் அங்கத்தவர்களுக்கு இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான  வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு   புதன்கிழமை(26) 3 ஆம் கட்டை சந்தியில் அமைந்துள்ள  இள மங்கையர் இல்லத்தில் நடைபெற்றது.

அகில இலங்கை இளம் மங்கையர் கழகத்தின் தலைவி.வசந்தி பெரோ தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் திருமதி.ஜெ.ஜெ.முரளிதரன் கலந்துகொண்டு வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில்  நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் சாரா ஆறுமுகம், திருகோணமலை வை.டபிள்யூ. எம்.சீ.எ திட்ட இணைப்பாளர் திருமதி தாயளினி உதயராஜ் ஆகியோர்  கலந்துகொண்டனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .