2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

வாத்திய கருவிகள் கொள்வனவுக்கு ஒரு இலட்சரூபா ஒதுக்கீடு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 06 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால்  மாவட்ட அபிவிருத்திக்கு வழங்கப்பட்ட நிதியில் இருந்து தி/மூதூர் சிங்கள மகா வித்தியாலயத்திற்கு வாத்திய கருவிகள் பெற்றுக் கொள்வதற்காக ஒரு இலட்சம் ரூபா நிதி சனிக்கிழமை(05) கையளிக்கப்பட்டது.

மூதூர் வலயத்திற்குட்பட்ட தி./மூ.சிங்கள மாகவித்தியாலத்தில் இடம் பெற்ற சிங்கள தமிழ் புதுவருட நிகழ்ச்சி மாவட்ட ஒருங்கிணைப்புகுழு தலைவரும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சுசந்த புஞ்சி நிலமேயின் தலைமையில்  இடம் பெற்றன.

இந் நிகழ்விற்கு பொருளாதார அபிவிருத்தி பிரதிஅமைச்சருமான சுசந்த புஞ்சிநிலமே மற்றும் அமைச்சரின் இணைப்புச் செயலாளரும் மூதூர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தலைவருமான ஜெயினுதீன் அமீர் மற்றும்  மூதூர் வலயக்கல்வி பணிப்பாளர் ஏ.விஜயனந்த மூர்த்தி பிரதி வலயக்கல்வி பணிப்பாளர் எம.எஸ.எம். றமீம் அல் மனார் வித்தியாலய அதிபர் எஸ். மஜூன், சிறிகஜமுக வித்தியாலய அதிபர் கே. வல்லிபுரம் மற்றும் மூதூர் சிங்கள மகா வித்தியாலய அதிபர் றெசான் ஜகத் குமார ஆகியோர் கலந்து கொண்டனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .