2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

உலமா செயலமர்வு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 06 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்
அகில இலங்கை ஜெம்மியதுல் உலமா சபையின் கிண்ணியா கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட பெண் உலாமாக்களுக்கான செயலமர்வு ஞாயிற்றுக்கிழமை(6) கிண்ணியா மத்திய கல்லூரி கேட்போர்கூடத்தில் நடைபெற்து.

இதன்போது, மார்க்க ரீதியாக சமுதாயத்தில் பெண்களின் சேவைகள் மூலம், சமூகத்துக்கு சிறந்த வழிகாட்டுவதற்காக   கிண்ணியா பிரதேசத்தில் பெண் உலமாக்களுக்கான அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டு நிர்வாக உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த அமைப்பு கிண்ணியா ஜெம்மியதுல் உலமா சபையின் பெண்கள் பிரிவாக இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பின் உதயம் குறித்து கிண்ணியா உலமா சபைத் தலைவர் மௌலவி ஏ.எம்.ஹிதாயத்துள்ள கருத்துத் தெரிவிக்கையில்,

இன்றைய  மாறும் உலகின் மாற்றங்களையும் நவீன சவால்களையும் இஸ்லாமிய ரீதியாக வெற்றி கொள்வதற்கும் சமூகத்தில்  பெண் உலமாக்களுடைய வழிகாட்டல்களும் சேவைகளும் தேவைகளாக உள்ளன.

இஸ்லாமிய வரலாற்றில் சஹாபியத்து பெண்கள் ஆற்றிய தனி மனித மற்றும் சமூக ரீதியான சேவைகள் ஒரு சிறந்த இஸ்லாமிய சமூகத்தைக் கட்டியெழுப்புவதில் மகத்தான பங்களிப்புச் செய்திக்கின்றன.

இந்த வகையில் பெண் உலமாக்களுக்கு சிறந்த பயிற்சியை வழங்கி அவர்கள் மூலம் ஒரு முன்மாதிரியான பெண்கள் சமூதாயம் ஒன்றை உருவாக்குவதற்கு நாங்கள் முயற்சி எடுத்து வருகிறோம்.

அத்தோடு பெண் முக்கியஸ்தர்களுடனான குறிப்பாக ஆசிரியர்கள், அரச ஊழியர்கள் உடனான கலந்துரையாளடல்களிலும் ஈடுபட்டு வருகிறோhம். இவர்களுடைய பங்களிப்பும் சேவையும் சமூகத்துக்கு  தேவையாக உள்ளன என்றும் தெரிவித்தார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .