2021 மே 18, செவ்வாய்க்கிழமை

பட்டினமும்சூழலும் பிரதேச செயலாளருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 28 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

திருகோணமலை மாவட்டத்தின்; பட்டினமும்சூழலும் பிரதேச செயலாளருக்கு எதிராக திருகோணமலை மத்திய பஸ் நிலையத்துக்கு  முன்பாக புதன்கிழமை (28) பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

நிதி ஊழல், காணிப்பகிர்வில் முறைகேடு, தனது கணவருக்கூடாக அரசாங்க அபிவிருத்தித் திட்டங்களை கொந்தராத்துக்கு கையளிப்பது, அலுவலகத்துக்கு  வரும் பொதுமக்கள் மீது சீறிச்சினமடைவது, உறுதிக் காணிகளில் வசிக்கும் மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்துவது உள்ளிட்டவை வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை தாங்கிய வண்ணம்  இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன், மேற்படி பிரதேச செயலாளரை இடமாற்றுமாறும் ஆர்;ப்பாட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர்.

இதேவேளை, திருகோணமலைக்கு சிவில் அதிகாரி ஒருவரை அரசாங்க அதிபராக நியமிக்குமாறு கோரியும் ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாகை ஏந்தியிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .