2021 மே 18, செவ்வாய்க்கிழமை

சுனாமியினால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு வீடமைப்பு செய்து தருமாறு கோரிக்கை

Sudharshini   / 2015 பெப்ரவரி 11 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

சுனாமியால் பாதிக்கப்பட்ட மூதூர் கரையோரக் கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ், நிரந்தரமாக வீடமைத்துக் கொடுக்க ஆவணம் செய்யுமாறு கோரி, பீஸ் ஹோம் அமைப்பின் தலைவர்; அமீர் எஸ். ஹமீட் கடிதமொன்றை வீடமைப்பு மற்றும் சமூர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு செவ்வாய்க்கிழமை (10) அனுப்பிவைத்துள்ளார்.


அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,


மூதூர் கரையோரக் கிராமங்களைச் சேர்ந்த  70க்கும்  மேற்பட்ட குடும்பங்கள் கடந்த  10 வருடங்களாக நிரந்தர வீடுகள் இல்லாமல் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.


திருகோணமலை மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மூதூர் பிரதேசமும் ஒன்றாகும். இப்பிரதேசத்திலுள்ள கரையோரக் கிராமங்களான தக்வா நகர், ஹபீப் நகர், பஹ்ரியா நகர் சுனாமியினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தன.


இவ்வனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் ஒரு தொகுதியினருக்கு மட்டுமே வீட்டு வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த பத்து வருடங்களாக 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தற்காலிக கொட்டில்களுக்குள் வாழ்ந்து வருகின்றனர்.


சுனாமியினால் சொல்லொண்ணாத் துயரத்தை சுமந்த இம்மக்கள்  நிரந்தர வீடுகளை அமைத்துத் தருமாறு, பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளிடமும் அரசியல் வாதிகளிடமும்  கடந்த பத்து வருடங்களாக  கோரிக்கை விடுத்து வந்தபோதும் இம்மக்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.


எனவே, நிரந்தர வீடில்லாது துயருறும் இம்மக்களுக்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ், நிரந்தர வீட்டை அமைத்துக் கொடுப்பதுக்கு ஆவணம் செய்யுமாறு இம்மக்களின் சார்பில் தங்களை தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம் என அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .