2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 245,155 பேர் வாக்களிக்க தகுதி

Super User   / 2011 ஜனவரி 18 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் சலாம் யாசிம்)

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் 13 உள்ளூராட்சி மன்றங்களுக்கு பிரதிநிதிகளை தெரிவுசெய்வதற்காக 245,155 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளதாக திருகோணமலை மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் நாலக ரத்னாயக தெரிவித்தார்.

இதன்படி திருகோணமலை நகர சபைக்கு 12 பேரை தெரிவு செய்வதற்காக 31,927 வாக்காளர்களும், கிண்ணியா நகர சபைக்கு 7 பேரை தெரிவு செய்வதற்காக 21,069 வாக்காளர்களும், வெருகல் பிரதேச சபைக்கு 07 பேரை தெரிவு செய்வதற்காக 5,894 வாக்காளர்களும் வாக்களிக்கவுள்ளனர்.

சேறுவில பிரதேச சபைக்கு 09 பேரை தெரிவு செய்வதற்காக 8,667 வாக்காளர்களும், கந்தளாய் பிரதேச சபைக்கு 11 பேரை தெரிவு செய்வதற்காக 30,332 வாக்காளர்களும், மொறவௌ பிரதேச சபைக்கு 09 பேரை தெரிவு செய்வதற்காக 8,659 வாக்காளர்களும் காமரங்கடவல பிரதேச சபைக்கு 09 பேரை தெரிவு செய்வதற்காக 5,831 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.

பதவிசிறிபுற பிரதேச சபைக்கு 09 பேரை தெரிவு செய்வதற்காக 8,362 வாக்காளர்களும், -திருகோணமலை பட்டனமும் சுழலும் பிரதேச சபைக்கு 09 பேரை தெரிவு செய்வதற்காக 29,947 வாக்காளர்களும், குச்சவெளி பிரதேச சபைக்கு 09 பேரை தெரிவு செய்வதற்காக 22,985 வாக்காளர்களும், தம்பலகாமம் பிரதேச சபைக்கு 09 பேரை தெரிவு செய்வதற்காக 17,125 வாக்காளர்களும், மூதூர் பிரதேச சபைக்கு 11 பேரை தெரிவு செய்வதற்காக 37,731 வாக்காளர்களும், கிண்ணியா பிரதேச சபைக்கு 07 பேரை தெரிவு செய்வதற்காக 16,626 வாக்காளர்களும் வாக்களிக்கவுள்ளதுடன் மொத்தமாக 02 நகர சபைகளும் 11 பிரதேச சபைகளும் திருகோணமலை மாவட்டத்தில் தேர்தல் நடைபெறவுள்ளதாக உதவி தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டார்.
 
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X