2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

நூலக வாசிப்பறை ஆசிரியர்களுக்கு 3 நாள் செயலமர்வு

Super User   / 2010 டிசெம்பர் 12 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

கிண்ணியா கல்வி வலயத்துக்குட்பட்ட அதிகஷ்ட பிரதேச 20 பாடசாலைகளைச் சேர்ந்த நூலக வாசிப்பறை  ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு மூன்று நாள் செயலமர்வொன்று ரூம் டூ ரீட் நிறுவனத்தின் நிதியுதவியின் கீழ் கிண்ணியா விஷன் அனுசரணையோடு இடம்பெற்றது.

கிண்ணியா விஷன் வாசிப்பறை இணைப்பாளர் தா.சவாஹிர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிண்ணியா வலயக் கல்வி பணிப்பாளர் ஏ.எல்.ஏ.குத்தூஸ், உதவிக்கல்வி பணிப்பாளர்கள், கிண்ணியா விஷன் இயக்குனர் ஏ.ஆர்.எம்.சைபுல்லா மற்றும் ரூம் டூ ரீட் நிறுவனத்தின் திருகோணமலை மாவட்ட வாசிப்பறை இணைப்பாளர் எஸ்.இராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மாணவர்களின் அறிவுத்திறனை வெற்றி கொள்வதற்காக இதில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--