Kogilavani / 2011 ஜூலை 14 , மு.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
ஐந்து வருடங்களின் பின்னர் மூதூர் கிழக்கு கூனித்தீவு பிள்ளையார் ஆலயம், பத்தரகாளி அம்மன் ஆலயம் என்பனவற்றுக்கு செல்வதற்கான அனுமதியை பாதுகாப்பு தரப்பினர் வழங்கியுள்ளனர்.
இவ் ஆலயங்களில் விசேட பொங்கல் வழிபாடுகள் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றன.
திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற இடங்களில் இருந்து பல நூற்றுக்கணக்கானோர் வழிபாடுகளில் கலந்துகொண்டனர்.
கட்டைபறிச்சான் நாவலடி சந்தியில் இருந்து படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட வாகனங்களில் பொது மக்கள் ஆலயங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். எனினும் கையடக்க தொலைபேசிகள், புகைப்பட கருவிகளை எடுத்துச் செல்வதற்கு படையினர் தடை விதித்திருந்தனர்.
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago