2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் செயலமர்வு

ஏ.எம்.ஏ.பரீத்   / 2019 நவம்பர் 12 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதித் தேர்தல் தினத்தன்று, திருகோணமலை மாவட்டத்தில் கடமையாற்றவுள்ள விநியோக, கையேற்கும் பணிகளில் ஈடுபடவுள்ள உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான அறிவுறுத்தல் பயிற்சிச் செயலமர்வொன்று, திருகோணமலையில் நேற்று (11) நடைபெற்றது.

திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும் உதவித் தெரிவத்தாட்சி அலுவலருமான கே.அருந்தவராஜா தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில், கிழக்கு மாகாணப் பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் கே.சுதாகரன், மாவட்டச் செயலக நிர்வாக உத்தியோகத்தர் நெரஞ்சன் ஆகியோரும் பங்கு கொண்டனர்.

ஜனாதிபதித் தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ள, உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்கள், சிரேஷ்ட தலைமை தாங்கும் உத்தியோகத்தர்கள், கனிஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்கள், மண்டப செயலாளர்களுக்கான அறிவுறுத்தல்கள் இதன்போது வழங்கப்பட்டன.

வாக்குப்பெட்டி விநியோகம், கையேற்றல் உள்ளிட்ட கடமைகளும், தேர்தல் தொடர்பான செயற்பாடுகள் குறித்தும் கிழக்கு மாகாணப் பிரதித் தேர்தல்கள் ஆணையாளரால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .