2020 ஜனவரி 28, செவ்வாய்க்கிழமை

ஆணின் சடலம் மீட்பு

எப். முபாரக்   / 2019 டிசெம்பர் 05 , பி.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை - கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், மலசலக் கூடமொன்றினுள் ஆணொருவரின் சடலம், நேற்று (04) மாலை மீட்டுள்ளதாக,  கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.

சேருநுவர பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய செல்டன் திஸாநாயக்க  என்பவரே, இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவித்த  பொலிஸார், இவர், செவ்வாய்கிழமை (03) இரவு உயிரிழந்திருக்கலாம் எனவும் சந்தேகம் தெரிவித்தார்.

குறித்த நபர், கந்தளாய் பகுதியில் 12 வருடங்களுக்கு மேலாக தொழில் மேற்கொண்டு, நகரில் வீடொன்றில் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார்.

 சடலத்தில் தலை, இடுப்பு, கால் பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இது கொலையா அல்லது மலசலக் கூடத்தினுள் தவறி விழுந்துள்ளாரா என்ற வகையில், கந்தளாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கந்தளாய் தள வைத்தியசாலையில் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .