2020 ஓகஸ்ட் 14, வெள்ளிக்கிழமை

டிப்பர் மோதி எரிபொருள் நிரப்பும் நிலைய ஊழியர் உயிரிழப்பு

எப். முபாரக்   / 2019 நவம்பர் 28 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திருகோணமலை, கந்தளாய் பகுதியில் எரிபொருள் நிரப்பும் நிலையமொன்றில் கடமையாற்றும் ஊழியர் ஒருவர், இன்று (28) அதிகாலை டிப்பர்  மோதியதில் உயிரிழந்துள்ளார் என கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.

கந்தளாய், பராக்கிரம மாவத்தையைச் சேர்ந்த 28 வயதுடைய டி. டிலான் என்வரே உயிரிழந்தவராவார்.

திருகோணமலையிருந்து குருணாகலுக்கு டிப்பர் ஒன்றே, மேற்படி ஊழியரை மோதி, விபத்தை ஏற்படுத்தி விட்டுச்  சென்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த ஊழியர், எரிபொருள் குழாய்யினுள் இறங்கி, எரிபொருள்  இருக்கும் அளவைப் பார்த்த போது, வேகமாச் சென்ற டிப்பர் மோதி விட்டுச்  சென்றதில், அவ் ஊழியரின் தலையில் பாரிய அடி ஏற்பட்டுள்ளதாக, கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.

டிப்பர் வாகனத்தின் சாரதியைக் கைது செய்துள்ளதோடு, டிப்பர் கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம், கந்தளாய் தள வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--