2020 ஜனவரி 28, செவ்வாய்க்கிழமை

திருகோணமலை மாவட்டத்திலும் பலத்த மழை

அப்துல்சலாம் யாசீம்   / 2019 டிசெம்பர் 03 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை மாவட்டத்தில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக, 237 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஆறு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக,  அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் திருகோணமலை மாவட்ட உதவிப் பணிப்பாளர் குகதாஸ் சுகுணதாஸ்  தெரிவித்தார்.

பதவிசிறிபுர, தம்பலகாமம், கந்தளாய்,மொரவெவ, கிண்ணியா, மற்றும் பட்டணமும் சூழலும் பிரதேச செயலகங்களில் சிறிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

இதேவேளை, கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட உப்பாறு வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,  பயணிகளின் நலன் கருதி படகு சேவையினை ஆரம்பிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், யான் ஓயா நீர் தேக்கத்தின் வான் கதவு ஒன்று இன்று திறக்கப்பட உள்ளதாகவும், மீன் பிடிப்பதற்காக அப்பகுதிக்கு செல்லும் மீனவர்களை செல்ல வேண்டுமெனவும், வயல் பிரதேசங்களுக்கு செல்லும் விவசாயிகள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் யான் ஒயா திட்டத்தின் பொறியியலாளர் பிரதீப் வெலிவிட பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தில் அனர்த்தம் தொடர்பில் பொதுமக்களுக்கு சேவைகளை வழங்குவதற்காக படையினரை சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாகவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் குகதாஸ் சுகுணதாஸ் மேலும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .