Editorial / 2019 டிசெம்பர் 09 , பி.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், ஏ.ஆர்.எம்.றிபாஸ், ஏ.எம்.கீத்
திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மனையாவெளி பிரதேசத்தில் மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்களில் ஒருவர் சடலமாக கரையொதுங்கினார்.
மற்றுமொருவர், திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.
மனையாவெளியைப் பிறப்பிடமாகவும் கந்தளாய் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட மூன்று பிள்ளைகளின் தந்தையான மாவனாவஹேவா ருக்மண் த சில்வா (வயது 42) என்பவரே, இவ்வாறு சடலமாகக் கரையொதுங்கியுள்ளாரென, துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.
மீனவர்கள் இருவர் மீன்பிடிக்கச் சென்ற போது, கற்பாறையுடன் படகு மோதி விபத்துக்குள்ளான நிலையில், கடற்படையினர், ஒருவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
நேற்று (08) இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில், திருகோணமலை - மனையாவெளிப் பகுதியைச் சேர்ந்த பைத்துல்லா என்றழைக்கப்படும் அப்துல் மஜீத் (49 வயது) என்பவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
52 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
56 minute ago
1 hours ago