Editorial / 2019 ஒக்டோபர் 09 , பி.ப. 12:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம், எப்.முபாரக்
திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்கோ பகுதியில் ரயிலுடன் மோதி இளைஞர் ஒருவர், நேற்று (08) மாலை உயிரிழந்துள்ளார்.
திருகோணமலை - அபயபுர, ரயில்வே லைன் பகுதியைச் சேர்ந்த என்.ஜோஹான் ஜோசப் (27 வயது) எனும் இளைஞனே, இவ்வாறு உயிரிழந்துள்ளாரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் குழந்தை, ரயில் தண்டவாளத்துக்குச் சென்றபோது மகனைப் பிடிப்பதற்காக அவரது மனைவியும் தண்டவாளத்துக்கு அருகே சென்றதாகவும், மகனையும் மனைவியையும் காப்பாற்றுவதற்காகச் சென்ற கணவர், ரயிலுடன் மோதியதாக, ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம், திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .