Princiya Dixci / 2021 ஜனவரி 11 , பி.ப. 03:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் 18 சிறு குளங்களில் 3 குளங்கள் உடைப்பெடுத்துள்ளதாக பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் ஜீ.சுஜிதரன் தெரிவித்தார்.
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலக்கந்தை குளமும் கோமரங்கடவல பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மஹாகல்லம்பத்த குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் மடுவக்குளமும் இவ்வாறு உடைப்பெடுத்துள்ளன.
இவற்றை சீர்செய்யும் பணியில் சிவில் பாதுகாப்பு படை வீரர்கள், விவசாய சங்கங்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஈடுபட்டுள்ளனர் எனவும் பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் தெரிவித்தார்.
இதேவேளை, கந்தளாய் பிரதேசத்தில் உள்ள பேரமடுவ மற்றும் மஹதிவுல்வெவ குளம் ஆகிய நீர் நிரம்பி வழிவதாக திருகோணமலை மாவட்ட நீர்ப்பாசன பணிப்பாளர் ஏ.கே.அப்துல் ஜபார் தெரிவித்தார்.
அத்துடன், யான் ஓயா நீர் தேகத்தின் 3 கதவுகள் திறக்கப்பட்டுள்ளன எனவும் தொடர்ச்சியாக மழை பெய்து வந்தால் இன்னும் 2 கதவுகளைத் திறக்க உள்ளதாகவும் யான் ஓயா திட்டத்தின் பொறியியலாளர் ஜனக்க ரணசிங்க தெரிவித்தார்.
43 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
4 hours ago
4 hours ago