2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

திருகோணமலை மாவட்டத்தின் சில பகுதிகளில் மின் தடை

Super User   / 2010 டிசெம்பர் 15 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

திருகோணமலை கிரிட் மின் நிலையத்தின் திருத்த வேலைகள் காரணமாக எதிர்வரும் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மற்றும் 22ஆம் திகதி புதன்கிழமை ஆகிய தினங்களில் திருகோணமலை மாவட்டத்தின் சில பிரதேசங்களில் மின்சாரத் தடை அமுலில் இருக்குமென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இதன்படி 21ஆம் திகதி கந்தளாய், மூதூர், கிண்ணியா, விமானப்படை, 4ஆம் கட்டை, அனுராதபுர சந்தி, அபயபுர சந்தி, கணேஷ் ஒழுங்கை, அன்புவெலிபுரம், வயோதயா நகர் மற்றும் கன்னியா ஆகிய பிரதேசங்களில் முற்பகல் 8.00 மணி தொடக்கம் பிற்பகல் 12.00 மணி வரையும் மின் தடை ஏற்படும்.

22ஆம் திகதி 3ஆம் கட்டை, அலஸ்தோட்டம், 6ஆம் கட்டை, நிலாவெளி, திரியாய, குச்சவெளி, இறக்கக்கண்டி, ஜின்னாநகர், கும்புறுப்பிட்டி. புல்மோட்டை, பன்குளம், கிவுலக்கட, கோமன்கடவெல, பக்மீகம, மொறவௌ மற்றும் புலிகண்டிவௌ ஆகிய பிரதேசங்களில் முற்பகல் 1.00 மணி தொடக்கம் பிற்பகல் 5.00 மணி வரை மின்சாரத் தடை அமுலில் இருக்குமென இலங்கை மின்சார சபை மேலும் அறிவித்துள்ளது.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X