2020 ஒக்டோபர் 19, திங்கட்கிழமை

புத்தர் சிலையை எடுத்துச் சென்ற மூவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 17 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்சலாம் யாசிம்)
 
சேருநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெஹிவத்த பகுதியில் புதையல் தோண்டியபோது,  புத்தர் சிலையை எடுத்துச் சென்றதான சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

சேருநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெஹிவத்த பகுதியில் புதையல் தோண்டியபோது,  புத்தர் சிலையை எடுத்து சென்றதாக கூறப்படும்  இந்த மூவரும் நேற்று புதன்கிழமை   இரகசிய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு  கந்தளாய் நீதிமன்றத்தில் ஆஐர்படுத்தப்பட்டபோதே, கந்தளாய் நீதவான் நீதிபதி இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.

இந்த மூவரும் முச்சக்கரவண்டியொன்றில் பயணித்துக்கொண்டிருந்த வேளையில் நேற்று புதன்கிழமை கந்தளாய் பகுதியில் கைதுசெய்யப்பட்டதாக கந்தளாய் இரகசிய பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X