2020 நவம்பர் 25, புதன்கிழமை

பொலிஸ் நிலையங்களில் தமிழ் மொழியில் முறைப்பாடுகளை பதிவு செய்ய வேண்டுகோள்

Super User   / 2011 ஒக்டோபர் 03 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சி.குருநாதன்)

திருகோணமலை மாவட்ட பொலிஸ் நிலையங்களில் தமிழ் மொழியில் முறைப்பாடுகளை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

திருகோமலை நகர சபை உறுப்பினர் சி.நந்தகுமார் திருகோணமலை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இந்த வேண்டுகோளினை விடுத்துள்ளார்.

அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

திருகோணமலை மாவட்டத்திலுள்ள பெரும்பாலான பொலிஸ் நிலையங்களில் பொதுமக்களின் முறைப்பாடுகள் சிங்கள மொழியிலேயே பதியப்படுகின்றன. அத்துடன் பொலிஸ் முறைப்பாட்டு பிரதிகளும் சிங்கள மொழியிலே வழங்கப்பட்டு வருகின்றன.

இதனால் பொலிஸ் நிலையங்களில் நன்கு தமிழ் எழுத மற்றும் வாசிக்க தெரிந்த பொலிஸ் உத்தியோகர்த்தர்களை நியமிக்க வேண்டும்.

இதனால்  தமிழ் மொழி மூலம் முறைப்பாடுகளை பதிவு செய்யவும் முறைப்பாட்டு பிரதிகளையும் வழங்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .