2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

டாக்டர் ஞானி கல்வி நிதியம் திட்டத்தின் கீழ் புலமைபரிசில் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2011 ஒக்டோபர் 20 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கஜன்)
திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி கனடா பழைய மாணவர் சங்கத்தினர் 'டாக்டர் ஞானி கல்வி நிதியம்' என்னும் திட்டத்தின் கீழ் தற்போது கல்லூரியில் கல்வி கற்றுவரும் 20 மாணவர்களுக்கு  புலமைப்பரிசில்களை வழங்கியுள்ளனர்.

இந்நிகழ்வு நேற்று புதன்கிழமை கல்லூரியின் சம்பந்தர் மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது, பழைய மாணவர் சங்கத்தின் போசகரி வைத்தியகலாநிதி கு.ஹேமச்சந்திரா, மன்னாள் கல்லூரி அதிபர் மா.இராசரெத்தினம், சி.தண்டாயுதபாணி  பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை செயற்குழு உறுப்பினர் செ.தயாளசீலன், திருகோணமலை சங்கத்தின் பொருளானர் ச.சர்வேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கான புலமைப்பரிசில்களை வழங்கி வைத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .