Suganthini Ratnam / 2015 ஓகஸ்ட் 16 , மு.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

-.ஏ.எம்.ஏ.பரீத்
இலங்கையில் நீதியானதும் நேர்மையானதுமான தேர்தலை நடத்துவதற்கான சூழல் தற்போது காணப்படுவதாக இலங்கை வந்துள்ள வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் தெரிவித்தனர்.
ஆசிய வலையமைப்பின் வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் கிண்ணியா பிரதேசத்துக்கு சனிக்கிழமை (15) மாலை விஜயம் மேற்கொண்ட நிலையில், கிண்ணியா பிரதேச சிறுவர் பூங்காவுக்கு முன்பாகவுள்ள ஹோட்டலில்; ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. இதன்போதே அவர்கள் மேற்கண்டவாறு கூறினர்.
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் செயற்பாடுகள், வாக்காளர்களின் நிலைமை உள்ளிட்வை தொடர்பில் ஆராய்ந்ததாகவும் தாங்கள் சென்ற இடங்களில் எவ்வித முறைப்பாடுகளும் தங்களுக்கு கிடைக்கவில்லை எனவும் வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் கூறினர்.
மேலும், இங்கு சுமூகமான நிலைமை காணப்படுவதாகவும் அவர்கள் கூறினர்.
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025