2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

ஆடுகளை கொண்டுசென்ற இருவர் கைது

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 20 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்                  

அனுமதிப்பத்திரமின்றி வாகனம்; ஒன்றில் 24 ஆடுகளை ஏற்றிக்கொண்டு சென்றதாகக் கூறப்படும் இரண்டு பேரை திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்  வியாழக்கிழமை பொலிஸார்  கைதுசெய்ததுடன், அந்த ஆடுகளையும் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.  

தோப்பூரிலிருந்து கொழும்புக்கு இந்த ஆடுகளை கொண்டு சென்றுகொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாகன சாரதி மற்றும் அவரின் உதவியாளருமே இதன்போது கைதுசெய்யப்பட்டனர். இவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .