2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

எல்பிட்டிய துப்பாக்கிச்சூடு : இருவர் கைது

Editorial   / 2017 ஜூன் 20 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி, எல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுகேதொட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், நேற்றிரவு 9.5க்கு இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, பொலிஸ் தெரிவித்தனர்.

எல்பிட்டிய, நுகேதொட்டவில் கடந்த 17ஆம் திகதி மாலை 2 மணிக்கும் 3 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டார்.

இக்கொலைக் குற்றச்சாட்டில் தொடர்புடைய சந்தேகத்தின் அடிப்படையிலே, 46 மற்றும் 52 வயதுடைய மேற்படி இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, எல்பிட்டிய பொலிஸ் தெரிவித்தனர்.

இவ்விருவரிடமும் தொடர்ச்சியான விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், எல்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில், இவர்களை, இன்று (20) ஆஜர்படுத்தவுள்ளதாக, எல்பிட்டிய பொலிஸ் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .