2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

மனைவியைக் கொன்ற இராணுவ வீரருக்கு மரண தண்டனை

Editorial   / 2017 ஓகஸ்ட் 09 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது மனைவியை, பொல்லால் தாக்கி கொலை செய்த முன்னாள் இராணுவ கோப்ராலுக்கு, அநுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி வினிசுர மஞ்சுல திலகரத்ன, இன்று (09) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

நொச்சியாகம – காலதிவுல்வெவ பகுதியைச் சேர்ந்த ஜயசேனகே ஜானக என்பவருக்கு இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது.

குறித்த நபர்,  மன்னார் பகுதியில் இருந்த இராணுவ முகாமில் கடமையாற்றியதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
2007ஆம் ஆண்டு செப்டெம்பர் 22ஆம் திகதி குறித்த நபர், தனது மனைவியை பொல்லால் தாக்கு கொலை செய்து, அவரது சடலத்தை புதைத்துள்ளார்.

இது தொடர்பான வழக்கு விசாரணை, அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குறித்த நபர் குற்றவாளியாக இனங்காணப்பட்டதையடுத்து, இன்று அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .