2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

மாகம்புர துறைமுகத்தில் ஊழியர் பற்றாக்குறை

Editorial   / 2017 டிசெம்பர் 19 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹம்பாந்தோட்டை – மாகம்புர துறைமுகம் சைனா மெர்சன்ட் போட் ஹோல்டின்ஸ் நிறுவனத்துக்கு நீண்டகால குத்தகை அடிப்படையில் கையளிக்கப்பட்டதை தொடர்ந்து, முதலாவது போக்குவரத்து கப்பல் நேற்று  (18) குறித்த துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டது.

 poctivi Pioneer என்ற குறித்த கப்பல் 400 வாகனங்களுடன் பனாமாவிலிருந்து வருகைத்தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை – மாகம்புர துறைமுகத்தில் முன்னர் பணிபுரிந்த ஊழியர்கள் சேவையிலிருந்து நீக்கப்பட்டதையடுத்து,  தற்போது அங்கு ஊழியர்கள் பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

சேவையிலிருந்து நீக்கப்பட்ட ஊழியர்களை மீண்டும் இணைத்துக்கொள்ள குறித்த நிறுவனம் தயாராக உள்ள போதிலும், அவர்கள் அதற்கு இணக்கம் தெரிவிக்காதுள்ளனர்.

இவ்வாறு சேவையிலிருந்து பலவந்தமாக  நீக்கப்பட்டதாக கூறப்படும் ஊழியர்களுக்கு அரசாங்கம் இழப்பீடு செலுத்தி வருகின்றமை குறப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .