2021 மார்ச் 03, புதன்கிழமை

மொனராகலை வீதிக்கருகில் சடலம் மீட்பு

Amirthapriya   / 2018 மே 07 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தள – ஒக்கம்பிட்டிய – மொனராகலை வீதிக்கு அருகில் ஆணொருவரின் சடலம் பொலிஸாரினால் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

43 வயதுடைய குறித்த நபர், நேற்றைய தினம் (06) இரவு விருந்தொன்றில் கலந்துகொள்வதற்காகச் சிலருடன் சென்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் விருந்து முடிந்து கெப் வாகனத்தில் திரும்பும் வேளையிலேயே கீழே விழுந்து இறந்திருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

குறித்த நபரின் சடலம் ஒக்கம்பிட்டிய வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .